உலகிலுள்ள உயிரினங்கள் எல்லாம் இயற்கை என்ற பஞ்ச பூதங்களை அடிப்படையாகக் கொண்டவை. உயிரினங்களின் உருவஅமைப்பு, உயிரினங்களின் வாழ்க்கைமுறை ஆகியன வாழுகின்ற இடத்தை அடிப்படையாகக் கொண்டது. உண்ணுதல், இனவிருத்தி ஆகிய செயல்கள். உயிரினங்களின் முதன்மையான இந்நிலையிலிருந்து உயிரினங்கள் மாறுபடவும் இல்லை. வேறுபடம் இல்லை. ஆனால் மனித இனம் இதிலிருந்து வேறுபட்டு இயற்கையை தன்னுடைய வாழ்க்கைக்கு சாதகமாக மாற்ற முற்பட்டது. இதனால் மனித இனத்தில் பல பரிணாம வளர்ச்சிகள் ஏற்பட்டன. தீயைக் கொண்டு உணவை வேகவைத்து உண்ணவும், மழைநீரையும், இரும்பையும் கொண்டு விவசாயம் செய்யவும், மண்ணைக் கொண்டு மட்கலங்கள் செய்யவும் கற்றுக் கொண்டான். இவை மனித சமுதாயத்தில் ஏற்பட்ட வளர்ச்சி நிலைகள். மனித இனம் எவ்வாறு படிப்படியாக வளர்ந்தது என்பதைக் கூறுவது தொல்லியல்.
மனித சமுதாயத்தில் நாடோடி சமுதாயம், நிலையான வாழ்க்கை, கால்நடை வளர்ப்பு சமுதாயம், வேளாண் சமுதாயம், எழுத்தறிவு பெற்ற சமுதாயம், அரசு உருவாக்கம், வரலாற்றின் தொடக்க காலம், வரலாற்றுக் காலம் போன்று பல வளர்ச்சி நிலைகள் உள்ளன. இவற்றைக் கொண்ட அக்கால சமுதாயத்தின் அமைப்பு, வளர்ச்சி, பண்பாடு ஆகியவற்றைப் பற்றி ஆய்வு செய்வது தொல்லியல் துறை. தமிழகத்தில் எக்காலத்தில் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதைப் பற்றி ஆய்வினை மேற் கொண்டவர்கள் வெளிநாட்டினர். இதைத் தொடர்ந்து உள்நாட்டு ஆய்வாளர்களும் பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.
கொற்றலையாற்றுப் படுகை
இராபட் புரூஸ்பூட்டையும் அவருடன் பணியாற்றி வில்யம் கிங்கையும் தொடர்ந்து 1863க்குப் பின்னர் 1930 வரையில் தொல்பழங்கால ஆய்வில் முன்னேற்றம் காணப்படவில்லை. 1930க்குப் பின்னர் வெளிநாட்டு ஆய்வாளர்களைத் தொடாந்து உள்நாட்டு ஆய்வாளர்களும் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். வட இந்தியாவில் சோகன் ஆற்றுப்பள்ளத்தாக்கு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆற்றின் படுக்கையை அடிப்படையாகக் கொண்டு சென்னைக்கு அருகில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓடுகின்ற கொற்றலை ஆற்றின் படுகையும் ஆய்வு செய்யப்பட்டது. சோகன் பள்ளத்தாக்கைப் போன்று கொற்றலை ஆற்றின் படுகையிலும் மூன்று ஆற்றுப்படுகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஆற்றுப் படுகையை பெட்டர்சன், டிடெரா, கிருட்டிணசாமி போன்று பலர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். அந்த ஆற்றுப் படுகையில் கற்கால மக்களின் கற்கருவிகைள் கண்டெடுத்தனர். இக்கருவிகளின் அமைப்பையும், கிடைந்த ஆற்றுப்படுகையையும் கொண்டு மூன்று காலத்தைச் சார்ந்த கற்கால மக்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்று வெளியிட்டனர். அக்கால மக்களின் வாழ்கை அமைப்பை அடிப்படையாகக் கொண்டு 1.பழையக்கற்காலம் 2.இடைக்கற்காலம் 3.கடைக்கற்காலம் என்று பெயரிப்பட்டன.
குடியம்
குகைகள்
குடியம் மலைப் பகுதியில் சுமார் 17 குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மூன்று குகைள் பெரிய அளவிலுள்ளன. ஒரு குகையில் சுமார் 500லிருந்து 600 பேர் வரை தங்குகின்ற அளவிற்குப் பெரியதாக உள்ளது. இப்பகுதியில் கற்கால மக்களின் கற்கருவிகள் கிடைக்கின்ற காரணதால் இக்குகையில் அக்கால மக்கள் வாழ்ந்திருக்கலாம் என்பதின் அடிப்படையில் குடியம் குகையில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. கே.டி.பானர்ஜி என்பவர் இக்குகையில் அகழ்வாய்வினை மேற்கொண்டார். இந்த அகழாய்வில் கிடைத்த மண் அடுக்குகளின் அடிப்படையிலும், அகழாய்வில் கிடைத்த கற்கருவிகளின் அடிப்படையிலும் இங்கு மூன்று காலத்தைச் சார்ந்த கற்கால மக்கள் வாழ்ந்துளளனர் என்பது தெரியவந்தது.
0 Comments