1.இராபட் புரூஸ் பூட்
கி.பி.15,16ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மருமலர்ச்சி, ஐரோப்பிய நாடுகளில் இப்பிரபஞ்சம், மனித இனம், சமயம் போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வுகள் மலர்ந்தன. கிரேக்கர், சீனர், ரோமநாட்டினர் தங்களுடைய பழம் பெருமைகளைப் போற்றத் தொடங்கினர். முன்னோர்கள் விட்டுச் சென்ற கலைகளின் மேல் ஆர்வம் காட்டினர். தென்மையான வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. இதுவே தொல்லியலின் தொடக்கமாகும்.
இராபர்ட் பூருஸ் பூட் |
ஐரோப்பிய நாட்டினர் வணிகத்தின் பொருட்டு பிற நாடுகளுடன் தொடர்பு கொண்டனர். அவ்வாறு அவர்கள் வணிகத் தொடர்பு கொண்ட நாடுகளில் உள்ள பழமை வா
ய்ந்த தொன்மைச் சான்றுகளையும் சேகரித்தனர். மேல்நாட்டினர் சங்ககாலம் தொட்டே தமிழகத்துடன் வணிகத் தொடர்பு கொண்டனர். பிற்காலத்தில் வணிகர்கள் வணிகச் சங்கங்களாக தமிழகத்தில் வியாபாரம் செய்தனர். அத்தகைய வணிகர்களைத் தமிழகத்திலிருந்த கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை போன்றன கவர்ந்தன. எனவே இவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள முற்பட்டனர். பல வெளிநாட்டினர் தமிழகத்திருந்த தொன்மங்களைப் பற்றி ஆய்வு செய்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் இராபர்ட் புரூஸ் பூட் என்பவர்.
இராபர்ட் புரூஸ் பூட் நிலவியல் மற்றும் தொல்லியல் ஆய்வாளர். இவர் கி.பி.1858 முதல் 1891 வரை தமிழத்தில் ஆய்வு செய்தார். சுமார் 43 ஆண்டுகள் தென்னிந்தியாவில் பல ஆய்வுகளை மேற்கொண்டார். கி.பி.1863ல் சென்னைக்கு அருகிலுள்ள அத்திரம்பாக்கத்தில் கற்கால மக்களின் கற்கருவிகளை கண்டெடுத்தார். இக்கருவிகள் ஆப்பிரிக்காவில் கிடைத்த கற்கருவிகளை ஒத்துள்ளன என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கற்கால மக்களின் கற்கருவிகள் கிடைக்கின்ற பகுதிகளை ஆய்வு செய்து ஆவணப்படுத்தினார். இவருடைய ஆய்வின் அடிப்படையில் தொல்பழங்கால மக்களின் சமுதாய அமைப்பு வகைப்படுத்தப்பட்டன. எனவே இவர் இந்திய தொல்லியலின் தந்தை என்ற போற்றப்படுகின்றார்.
இந்திய தொல்லியலின் தந்தை இராபர்ட் புரூஸ் பூட் புவியியல், தொல்லியல், மானிடவியல், அருங்காட்சியகவியல் ஆகியவற்றில் புலமை பெற்றவர். சென்னைக்கு அருகில் ஓடுகின்ற கொற்றலை ஆற்றின் கரையில் பல இடங்களில் கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகளைச் சேகரித்தார். பல்லாவரம், அத்திரம்பாக்கம், குடியம் போன்ற இடங்களில் கிடைத்த கற்கருவிகளை சேரித்து வகைப்படுத்தினார். நர்மதை ஆற்றின் பள்ளத்தாக்கில் இவர் கண்டுபிடித்த தொல்லியல் சான்றுகள் இவருக்கு புகழைத் தேடித்தந்தது. இவருடைய கண்டுபிடிப்புகளைடக் குறிப்புகளாகவும், விளக்கங்களாகவும், கட்டுரைகளாகவும், வரைபடங்களாகவும் சேகரித்தார். இவருடைய ஆய்வுகள் பல புத்தங்களாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் சில குறிப்பிடத்தக்கன.
- R.B. Foote, 1916. "The Foote Collection of Indian Prehistoric and Protohistoric Antiquities. Notes on their Ages and Distribution. Chennai”
- “Rough Notes on the Billa Sargam and Other Caves in the Kurnool District, Records of the Geological Survey of India."
பழையகற்காலம், புதியகற்காலம், பெருங்கற்காலம் ஆகிய காலங்களைச் சார்ந்த தொல்லியல் சான்றுகள் இவரால் ஆவணப்படுத்தப்பட்டன. கற்கருவிகள், மட்கலங்கள், வரைபடங்கள் போன்றன சேகரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டன. இவருடைய கண்டுபிடிப்புகள் சென்னை அருங்காடசியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தென்னிந்தியாவில் பல இடங்களில் களஆய்வு மேற்கொண்டு அவற்றைக் குறிப்புகளாகவும், ஆய்வு நூல்களாகவும் சேகரித்தார். இவருடைய ஆய்வுகளின் அடிப்படையில் பல வெளிநாட்டு ஆய்வாளர்களும் உள்நாட்டு ஆய்வாளர்களும் தங்களுடைய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர் என்றால் அது மிகையாகாது. இவருடைய கல்லறை சேலம் அருகில், ஏற்காட்டு மலையிலுள்ள டிரினிட்டி தேவாலயத்தின் வளாகத்தில் உள்ளது. இவரின் நினைவை போற்றும் வகையில் இராபார்ட் புரூஸ் மியூசியம் பெல்லாரியில் அமைந்துள்ளது.
இராபாரட் பூரூஸ் பூட் கல்லறை |
0 Comments