ஊழிக்காலங்கள்
பூமி தொடக்கக் காலத்தில் மிகப்பெரிய நெருப்பு பிளம்பாக இருந்தது. இந்நெருப்புப் பிளம்பு நாளவில் குளிரத் தொடங்கியது. பூமி குளிர்வதற்குப் பல இலட்சம் ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. மழைக்காலம், பனிக்காலம், வரண்டக்காலம் என்று பல மாற்றங்கள் பூமியில் பல முறை ஏற்பட்டன. இத்தகைய கால மாற்றங்களை நிலவியல் ஆய்வாளர்கள் வகைப்படுத்தி பெயரிட்டுள்ளனர். இவற்றை ஊழிக்காலங்கள் என்று அழைக்கின்றனர். நெருப்பு பிளம்பாக இருந்த பூமி பிலியோசியன் என்ற காலம் வரையில் உயிரினங்கள் உருவாவதற்கான தட்பவெட்ப நிலை ஏற்படவில்லை. அதற்குப் பின்னர் வந்த முதல் பிலைஸ்டோசன் காலத்தில் (20,00,000) முதன்முதலில் உயிரினங்கள் உருவாயிற்று. இக்காலத்தில் உருவான உயிரங்கள் இடைக், கடை பிலைஸ்டோசன் காலங்களில் பரிணாம வாளர்ச்சி அடைந்தன. தற்போதுள்ள காலம் ஆலோசியன் காலம் என்று பெயரிட்டுள்ளனர்.
ஆலோசியன் அல்லது அண்மைக் காலம் 10,000
கடைப் பிலைஸ்டோசன் காலம் 1,50,000
இடைப் பிலைஸ்டோசன் காலம் 7,50,000
முதல் பிலைஸ்டோசன் காலம் 20,00,000
பிலியோசன் ……………….
ஆற்றுப்படுகை
ஊழிக்காலங்களில் பெரிய மழை, பனிக்காலம், வரண்டக்காலம் என்று பல மாற்றங்கள் ஏற்பட்டதால் ஆற்றுப்படுகைகள் உருவாயிற்று. இத்தகைய ஆற்றுப் படுகைகளை பல ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். டிடெரா, பெட்டர்சன் போன்ற சில நிலவியல் ஆய்வாளர்கள் தமிழகத்திலுள்ள கொற்றலை ஆற்றுப்படுகையை ஆய்வு செய்தனர். கொற்றலை ஆற்றுப்படுகையில் மூன்று ஆற்றுப்படுகைகள் இருப்பதைக் கண்டுபிடித்துனர். இம்மூன்று ஆற்றுப்படுகையிலும் மூன்று காலங்களைச் சார்ந்த மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை ஆற்றுப்படுகையில் கிடைத்த கற்கருவிகளைக் கொண்டு முடிவு செய்தனர்.
ஆற்றுப்படுகைகள் உருவான காலத்தைப் பொட்டாசியம் ஆர்கான் அறிவியல் முறைப்படி ஆய்வு செய்து மேல் கூறப்பட்ட காலத்தைக் கணக்கிட்டுள்ளனர். ஊழிக்காலத்தில் ஏற்பட்ட தட்பவெட்ப மாற்றங்களால் செம்மண்ணும் கூழாங்கற்களும் இறுகி திரண்டு செம்பராங்கல் படிவங்களாகவும், செம்பராங்கல் திரலைகளாகவும் உருமாற்றம் பெற்றன. இச்செம்பராங்கற் படிவங்களில் கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. இக்கற்கருவிகளின் அமைப்பு, செய்முறைகள், கற்கருவிகள் கிடைக்கின்ற ஆற்றுப் படுகைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பழையகற்காலம், இடைக்கற்காலம், கடைக்கற்காலம் ஆகிய காலங்களைச் சார்ந்த மக்கள் இங்கு வாழ்துள்ளனர் என்பது முடிவு செய்யப்பட்டது.
கொற்றலை ஆறறுப்படுகையில் 2,50,000 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததற்கானத் தடையங்கள் கிடைக்கவில்லை என்பது முடிவு செய்யப்பட்டது. இதை இப்பகுதியில் மேற்காள்ளப்பட்ட அகழாய்வுகள் இக்காலங்களை உறுதிபடுத்தியுள்ளன. குடியம், அத்திரம்பாக்கம், பரிகுளம் போன்ற இடங்களில் செய்யப்பட்ட அகழாய்வுகள் மூன்று காலத்தச் சார்ர்ந்த மக்களில் காலத்தை உறுதிபடுத்தியுள்ளன.
0 Comments