நினைவில் வாழும் மார்க்சிய அறிஞர் தேவ.பேரின்பன் அவர்களால் 2011 ஆம் “அதியமான் சமூக வரலாற்று ஆய்வு மையம்” (பதிவு எண்:19/2011) தருமபுரியில் துவங்கப்பட்டது.
தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் பல்வேறு ஆய்வுகள், தொல்லியல் தொடர்பான கட்டுரைகள், கள ஆய்வுகளையும் செய்துவந்தது. இந் நிலையில் 17.09.2013 அன்று தேவ.பேரின்பன் இயற்கை எய்தினார். இதனால் இச் சங்கப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்ப்பட்டது.
2018 ஆம் தருமபுரி புத்தகத் திருவிழாவிற்கு பின் அதியமான் வரலாற்று சங்கத்தின் புரவலர் மரு. இரா. செந்தில் அவர்களால் சங்கத்தை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியது. சங்க பதிவாளரிடம் சங்கத்தை புதுபிக்க விண்ணப்பம் அளிக்கப்பட்டது. சங்கப் பதிவளார் நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ளதால் சங்க பதிவினை புதுப்பிக்க இயலாது என்ற தகவலை வழங்கினார்.
இதன் பிறகு தேவ.பேரின்பன் அவர்களின் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க புதிய பெயரில் இயங்குவது என்று முடிவு செய்து “தகடூர் அதியமான் வரலாற்றுச் சங்கம்” என்ற பெயரில் சங்கம் பதிவு செய்து தற்போது தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.
0 Comments