தகடூர் அதியமான் வரலாற்று சங்கத்தின் மூலம் 04.03.2021 அன்று அன்றைய தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் இஆப அவர்களை சங்கத்தின் செயலாளர் மரு. இரா. செந்தில் அவர்கள் நேரில் சந்தித்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள பின்வரும் பழங்கால சின்னங்களை பாதுகாக்க கோரிக்கை விடுத்தார்.
- தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அரியவகை ஆதனூர் பெருங்கற்கால கல்வட்டம்.
திருமல்வாடியிலுள்ள சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட குத்துக்கல்
தருமபுரிக்கு அருகிலுள்ள பங்குநத்தம் கிராமத்தில் உள்ள 500க்கும் மேற்ப்பட்ட பெருங்கற்கால கல்வட்டங்கள்
கம்பைநல்லூர் பேருராட்சி, வெதரம்பட்டி என்ற ஊரில் உள்ள ஏழுசுத்துக் கோட்டை என்று அழைக்கப்படும் புதிர்நிலை சின்னம்.
மதில், அகழி, ஆயுதக்கிடங்கு, கோயில்கள் போன்றன நல்ல நிலையிலுள்ள தென்கரைக் கோட்டை.
அதனை தொடர்ந்து தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு. வெங்கடேஸ்வரன் அவர்கள் முதலமைச்சர் அவர்களுக்கு பங்குநத்தம் பெருங்கற்கால ஈம சின்னங்களை பாதுகாக்க கோரி கடிதம் அளித்தார்.
கடந்த ஆண்டு (05.11.2023) பங்கு நத்தம் பெருங்கற்கால சின்னங்கள் அமைந்துள்ள பகுதியில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் சுற்று சுவர் அமைக்கப்பட்டு பெருங்கற்கால சின்னங்கள் பாதுகாப்பட்டது.
அதனை தொடர்ந்து இந்த ஆண்டு (27.06.2024) ஆதனூர் கல்வட்டம் பாதுகாக்கபட்ட தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
| ||
பங்கு நத்தம் பெருங்கற்கால சின்னங்களை பார்வையிடும் தொல்லியல் சுற்றுலா குழுவினர் |
தகடூர் அதியமான் வரலாற்றுச் சங்கம் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள பழங்கால சின்னங்களை பாதுகாக்க செயல்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
துணைத் தலைவர்
1 Comments
Happy
ReplyDelete